ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் கதை சொல்லும் முறை
(i) குழந்தைகளைப் பார்த்து கதைகளை நல்ல உணர்ச்சியுடன் சொல்ல வேண்டும். அவற்றைப் படித்தல் கூடாது.
(ii) குழந்தைகள் உற்சாகம் கொள்ளுமாறு ஆர்வத்துடன் சொல்ல வேண்டும்.
(iii) குழந்தைகள் எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடிய கதைகளைச் சொல்ல வேண்டும்.
(iv) கதை நிகழ்ச்சிக்குத் தக்கபடி முகபாவம், குரல் முதலிய வற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்.
(v) அளவுக்கு மீறிய உடல் அசைவுகள் நன்மைக்குப் பதிலாக கேடுவிளைவிக்கும் - குழந்தைகளின் கவனத்தைச் சிதற அடிக்கும். எனவே, மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
(vi) குழந்தைகளின் அறிவு நிலைக்கு ஏற்ற கதைகளைச் சொல்லுதல் வேண்டும்.
(vii) கதையைச் சொந்த நடையில் சொல்ல வேண்டும். படிப்பது போலச் சொல்லக்கூடாது.
(viii) கதையில் பொதிந்துள்ள நீதியைக் குழந்தைகள் உணருமாறு செய்ய வேண்டும். வெளிப்படையாகக் கூறுதல் விரும்பத்தக்கதன்று.
(ix) கதை சொல்ல நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளக்கூடாது. குழந்தைகளுக்குச் சீக்கிரம் களைப்பு உண்டாகும்.
(x) படங்களைப் பயன்படுத்தி நிகழ்ச்சிகளை விளக்கிக் கதைகள் கூறுதல் நன்று.
குழந்தைகள் அல்லது மாணாக்கர் கதை சொல்லும் முறை
(i) ஆசிரியர் சொன்ன கதையைக் குழந்தைகள் திரும்பத் தம் சொந்த நடையில் கூறச்செய்ய வேண்டும்.
(ii) இதனை ஒரு மாணவன் வகுப்பு முழுவதும் சொல்லலாம் அல்லது பலர் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து அதனைத் தங்கள் குழுவில் கூறலாம்.
(iii) பலருக்கும் ஒரே வேளையில் பயிற்சி கிடைக்கும்.
(iv) ஆசிரியர் சொன்னதைப் போன்ற வேறு ஒரு கதையைக் குழந்தைகள் கூறலாம்.
(v) ஒரு கதையின் முக்கிய நிகழ்ச்சிகளைக் கரும்பலகையில் எழுதி முழுக்கதையையும் குழந்தைகளைக் கூறச் செய்யலாம்.
(vi) கதையின் முடிவை மட்டும் கொடுத்து கதையைக் கூறச் செய்யலாம். கதையின் தொடக்கத்தை மட்டும் கூறி, அல்லது பாதிக் கதையைக் கூறி மீதியைக் குழந்தைகள் கூறுமாறு செய்யலாம்.
(vii) கதையின் உயிர் நாடியான சொல்லையோ, சொற்றொடரையோ, கூறிக் குழந்தைகளைக் கதையை உருவாக்கச் செய்யலாம்.
(viii) கதையின் முடிவைக் கொடுத்துக் கதையைக் கூறச் செய்யலாம்.
இவ்வாறு பல் வகைகளில் கதைகளைப் பயன்படுத்தி மாணாக்கர் மொழிதிறனையும் குழந்தைகளின் மொழிதிறனையும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் சேர்ந்து ஒரே மாதிரியான கற்றிப்பிக்கும் முறையை பயன்படுத்த வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக