திங்கள், 11 மார்ச், 2013

அன்பு வெற்றி செல்வம்.

அன்பு, வெற்றி, செல்வம், என்ற மூவரும் நண்பர்கள் ஆவார்கள். இவர்கள் நாள் தோறும் யார் அழைத்தாளும், அவர்களுடைய வீட்டிற்க்குச் சென்று அவர்களை உபசரிப்பது வழக்கம்.

ஒரு நாள் மாலை ஆறு மணி ஆகிவிட்டது. ஊரில் உள்ளவர்கள் எல்லோருடைய வீட்டிலும் குத்துவிலக்கேற்றி பூஜை அரையில் இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமையத்தில் ஒரு வீட்டில் வயதான பெரியவர் வீட்டுக்கு வெளியில் உள்ள தின்னையில் அமர்ந்து கொண்டிருந்தார்.

அன்பு, வெற்றி, செல்வம் என்ற மூன்று நண்பர்களும் அந்தப் பெரியவரைப் பார்த்தவாரு தெருவில் சென்றுக் கொண்டிருந்தனர். பெரியவர் அவர்களை அழைத்தார், அவர்களின் பெயர் மற்றும் அவர்களை பற்றி விசாரித்தார்.
உடனே பூஜை அறையில் இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்த தனது மருமகளுக்கு குரல் கொடுத்தார்... நமது வீட்டிற்க்கு வெற்றி, செல்வம், அன்பு என்ற மூன்று பேர் வந்திருக்கிறார்கள். அவர்களில் யாரை அழைப்பது என்று கேட்டார்.

அதற்க்கு அந்த பெரியவரின் மருமகள், அந்த மூவரையும் நமது வீட்டிற்க்கு அழைத்து வாருங்கள் அப்போது தான், நமது வீடு சந்தோஷமாகவும் செல்வச் செழிப்போடும் இருக்கும் என்றால். 

உடனே அந்தப் பெரியவர். வெளியில் காத்திருந்த அந்த மூவரையும் தனது வீட்டிற்க்கு வந்து தங்களை உபசரிக்கும்மாறு கேட்டுக்கொண்டார். அதற்க்கு அந்த மூவர் அளித்த பதில் என்னத் தெரியுமா! எங்களில் யாரையாவது ஒருவரை மட்டும் தான் நீங்கள் அழைக்க வேண்டும் மற்ற இருவர்கள் ஊரில் உள்ள மற்ற வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்றனர்.

இந்த செய்தியைக் கேட்டவுடன், உடனே அந்த பெரியவர் தனது மருமகளிடம் விஷயத்தை சொன்னார். அதற்க்கு அந்த மருமகள் அப்படியானல்... நமது வீட்டிற்க்கு செல்வத்தை அழைத்து வந்துவிடுங்கள். அவனைவைத்து நமக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ளலாம் என்றால்.

உடனே அந்த பெரியவர் செய்வதறியாமல் தனது வீட்டிற்க்கு செல்வத்தை அழத்துக்கொண்டார். மற்ற இருவர்கள் புறப்பட்டு சென்றுவிட்டனர்.

வெற்றி, மற்றும் அன்பு ஆகிய இருவர்களில் வெற்றியை ஒரு வீட்டுக்காரர் அழைத்துக்கொண்டார். பிறகு அன்பு தனிமைப்படுத்தப்பட்டான். கடைசியாக ஒரு ஏழை விவசாயி வேறு வழியின்றி அன்பை தனது வீட்டிற்க்கு வந்து தங்களை உபசரிக்கும்மாறுக் கேட்டுக்கொண்டார்.

சிறிது நாள் சென்றது. தனது நண்பன் அன்பு என்றவனைக் காணாமல், பேசாமல் இருந்ததால் துடிதுடித்துப் போய்விட்டார்கள் வெற்றியும், செல்வமும்.

வெற்றியும், செல்வமும் உடனே ஒரு முடிவை எடுத்தார்கள். அவர்கள் குடிக்கொண்ட வீட்டில் உள்ளவர்களை அழைத்து “அன்பு” எங்களது ஆறுயிர் நண்பன் அவனைக் காணாமல் பேசாமல் எங்களால் ஒரு நொடியும் இருக்க முடியாது. ஆகையால் தயவு செய்து எங்களை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு மறு கணமே அங்கிருந்து கலம்பிவிட்டார்கள் அன்பு இருக்கும் இடத்திற்க்கு.

அன்பு இருக்கும் இடத்தில் தான் வெற்றியும் செல்வமும் நிலைத்திருக்கும். மற்ற இடங்களில் ஒருவேலை வெற்றியும், செல்வமும் இருந்தாலும் அது நிலைத்திருக்காது என்பது உண்மை. அவற்றை இந்த கதையின் மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

அன்பு என்றால்! மன்னிப்பு, சகிப்புதன்மை, கருனை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, நன்மை மற்றும் தீமையை கண்டறியும் தெளிவு, பாசம், முரட்டுதனம் இல்லாத காதல். இவையெல்லாம் மனிதக் குலத்திற்க்கே உள்ள கடவுள் கொடுத்த மகத்தான சொத்து.

இத்தகைய சொத்தை பயன்படுத்தி வாழ்கையில் மோகம் இல்லாமலும், வெறுப்பு இல்லாமலும், கொடூரங்களை செய்யாமலும், வாழ்க்கையின் நியதி அறிந்து நிம்மதியாக வாழலாம்.  

ஞாயிறு, 10 மார்ச், 2013

உள்ளதும் போச்சே!

சேவல் ஒன்றுக்கு வளம் இல்லாத புன்செய் நிலம் இருந்தது. அந்த நிலத்தில் கம்பு, சோளம், கேழ்வரகு விளைந்தன. அந்த உணவைக் கொண்டு சேவல் வாழ்ந்து வந்தது.

ஒருமுறை தொலைவில் உள்ள நண்பன் வாத்தைப் பார்க்கச் சென்றது. சேவலை நன்கு உபசரித்து அரிசிச் சோறு போட்டது. அரிசிச் சோற்றை இதுவரை சாப்பிடாத சேவல், இது எப்படிக் கிடைக்கிரது என்று நண்பனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டது.

தன் வயலில் விதைப்பதற்காக நெல்லை வாங்கிக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டது. தன் வயலில் நெல்லை விதைத்தது சேவல். மழை பெய்யாததாலும் புன்செய் நிலமாக இருந்ததாலும் நெல் விளையவே இல்லை.

எந்த நிலத்தில் எதை விதைக்க வேண்டும் என்று அறியாமல் தவறு செய்துவிட்டேன். ஓரளவு விளையும் கம்பு, சோளத்தையும் இழந்துவிட்டேன் என்று வருந்தியது சேவல்.

பிறகு சேவல் தன் நிலத்தில் பழையபடியே, மானவரி பட்டத்தில் மழை வரும்போது நன்கு உழுது அதற்க்கு தேவையான சிறுதானியங்களை விதைத்து அறுவடைச் செய்து உண்டு வந்தது.

 சிறிது நாட்கள் கழித்து சேவல் தனது நண்பன் வாத்தைப் பார்க்க சிறுதானியங்களை கொஞ்சம் எடுத்துக் கொண்டு புறப்பட்டது. வாத்து அரிசிமாவால் செய்யப்பட்ட சுவையான உணவு வகைகளைச் சாப்பிட்டு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உறங்கி கிடந்தது. இதனை கண்ட சேவல், அதிர்ந்துப்போய் நண்பா என்ன ஆச்சு உனக்கு ஏன் இப்படி உறங்கி கிடங்கின்றாய் என விசாரித்தது.

நண்பா உணவே மருந்து என்று சொல்வார்கள். ஆனால் நான் அதை இப்போது தான் உனர்கிறேன். என்னுடைய உணவு பயக்கத்தில் கொஞ்சம் கட்டுபாடு இருந்திருக்கவேண்டும் அதன் விலைவு என்னை நோயாலியாக மாற்றி விட்டது.

வாத்து இவ்வாறு சொன்னதும் கலங்கிபோனது சேவல்! என்ன நண்பா சொல்கிறாய்? உணவு என்பது பசியை நீக்க கடவுள் கொடுத்த பிரசாதம் அதை போய் இவ்வாறு தீங்கு விலைவித்துவிட்டது என்று குற்றம் கூறுகிறாயே என்று கேட்டது.

இல்லை நண்பா உன்னுடைய உணவுகளை உற்பக்தி செய்ய கடவுள் நிரைய கட்டுபாடுகளை விதித்திருக்கிறார்... குறைந்த மழை, மேட்டு நிலம், அதிக வெயில், திட்டமான மகசூல் என பல கட்டுபாடுகளை வைத்து கடவுள் இயற்கையாகவே உன்னை கட்டுப்படுத்துகின்றார். ஆகையால் நீய் ஆரோக்கியமான உனவை அலவோடு சாப்பிட்டு நிம்மதியாய்  இருக்கின்றாய்.   

ஆனால் வாத்து இனத்திற்கு பல்லதாக்கு நிலம், அதிக மழை, திட்டமான வெயில், அதிக மகசூல் என கட்டுபாடுகள் இல்லாமல் வாழவிட்டுவிட்டார். இதன் காரணமாக நாங்கள் அமோகமாக விவசாயம் செய்து ஏழை எளியவர்களுக்கு கொடுக்காமல் நாங்களே சாப்பிட்டோம். நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்திருந்தோம் மற்றவர்களை தாழ்வாக என்னினோம், ஆனால் எங்களின் சத்தான உணவின் சுவை எங்களுடைய உயிர்காக்க பயனற்று போய்விட்டது. என முனுமுனுத்தது வாத்து.

அப்படியில்லை நண்பா கடவுள் உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் ஒரே கண்ணோட்டதில் தான் பார்கின்றார்.
உயர்வான வாழ்கை வாழ்வதாக நினைப்பவர்கள் மற்றவர்களுக்கு கொடுத்து உதவேண்டும். கர்வம் கொள்ளக்கூடாது மாறாக கருனையுள்ளவர்களாக இருக்க வேண்டும். அதேபோல் தாழ்வான வாழ்கை வாழ்வதாக நினைப்பவர்கள் வருத்தம் அடையக்கூடாது மாறாக நம்பிக்கை உடையவர்களா இருக்கவேண்டும். இவ்வாரு இருந்தால் உலகில் ஏற்றதாழ்வு இல்லாமால் எல்லோரும் சந்தேஷமாக வாழளாம் இது இயற்கையின் நீதி ஆகும் என்றி கூறிவிட்டு... சேவல் தான் கொண்டுவந்த சிறுதானியங்களை வாத்திடம் கொடுத்து இதனை சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோய் படிப்படியாக குறையும் என்று ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து தனது வீட்டுக்கு கிளம்பியது.   

மனவலிமையே வெற்றி தரும்



முன்னொரு காலத்தில் சூரன் என்கிற ராட்சசன் இருந்தான். மிகவும் பயங்கரமானவன். ஊர் ஊராகச் சென்று தனக்கான இரையைத் தேடிக்கொள்வான். அதில் அவன் ஒரு வழக்கத்தை வைத்திருந்தான். அது என்ன தெரியுமா? ஒவ்வொரு ஊருக்கு வந்ததும் மக்களை அழைப்பான். நமக்கிடையே ஒரு சவால். உங்களில் யாராவது ஒருவர் என்னைவிட பலசாலி என்று நிரூபித்துவிட்டால் அவர்களின் அடிமையாகி சொன்னதைச் செய்வேன். இந்தச் சவாலில் கலந்துகொள்ள யாருக்கும் விருப்பம் இல்லையென்றால் ஊரை விட்டுத் சென்றுவிடுங்கள். நீங்கள் மட்டும்தான் செல்ல வேண்டும். ஆடு, மாடுகளை இங்கேயே விட்டுவிட வேண்டும். இதை மீறினால் உங்களையும் சேர்த்துக் கொன்று தின்றுவிடுவேன். ஒரு நாள் அவகாசம். முடிவு செய்யுங்கள் என்று கூறிவிட்டு ஊர் எல்லையில் சென்று காத்திருப்பான்.

ராட்சசனுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா? அதனால் உயிர் பிழைத்தால் போதும் என்று எல்லோரும் ஊரை விட்டே சென்று விடுவார்கள். பிறகு ஊருக்குள் வரும் சூரன் அங்கிருக்கும் ஆடு, மாடுகளை அடித்துத் தின்பான். எல்லாம் காலியாகும் வரை அந்த ஊரில் இருப்பான். பிறகு வீடுகளை எல்லாம் இடித்து தள்ளிவிட்டு அடுத்த ஊருக்குச் செல்வான். அங்கும் இதே கதைதான்.

அப்படித்தான் பொன்னம்பட்டிக்கு வந்து மக்களிடம் சவால் விட்டான். வழக்கம் போல் ஊர் எல்லையில் சென்று காத்திருந்தான். அனைவரும் தங்களுக்குத் தேவையான பொருட்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு ஊரைவிட்டுச் செல்லத் தயாரானார்கள்.

அதே ஊரில் அறிவழகன் என்பவன் இருந்தான். பிறவியிலேயே ஒரு காலை இழந்தவன். பெற்றவர்களும் இல்லை. பக்கத்து வீட்டுப் பாட்டிதான் அவனுக்கு சில உதவிகளைச் செய்வாள்.

ஏன் எல்லோரும் இப்படிப் பயப்படுகிறீர்கள். இது நமது ஊர். நாம் எதற்காக ஒட வேண்டும்? என்று கேட்டான்.

ஓடாமல் இங்கேயே இருந்து ராட்சசனுக்கு இரையாகச் சொல்கிறாயா? அவனோ ராட்சசன். நாமோ சாதாரண மனிதர்கள். அவனுடன் போட்டியிட்டு ஜெயித்துக் காட்டுகிறேன். நீங்கள் எல்லாம் இங்கேயே இருங்கள் என்றான் அறிவழகன்.

நீயா? ஒரு கால் இல்லாத உன்னால் என்ன செய்ய முடியும்? உன்னை நம்பி எங்கள் உயிரை இழக்கத் தயாராய் இல்லை. நாங்கல் செல்கிறோம் என்றாள் ஓருத்தி..

அனைவரும் ஊரை விட்டு செல்ல ஆரம்பித்தனர்.

அறிவழகா! நான் சொல்வதைக் கேள். எங்களுடன் வந்துவிடு என்றாள் பக்கத்து வீட்டுப் பாட்டி.

இல்லை பாட்டி! நான் அந்த ராட்சசனை ஜெயித்துக் காட்டுகிறேன். நீங்கள் எனக்காக சில உதவிகளைச் செய்யுங்கள். ஒரு பெரிய வெண்ணெய் கட்டி உருண்டையைச் செய்து அதன் மீது சேற்றைப் பூசிக் கொடுங்கள். ஒரு பாத்திரத்தில் குங்குமம் கலந்த தண்ணீரைக் கொடுங்கள். ஒரு முயல் குட்டிக்கும் ஏற்பாடு செய்யுங்கள் என்றான் அறிவழகன்.

அவன் கேட்டதை எல்லாம் கொடுத்துவிட்டு பாட்டியும் ஊர் மக்களோடு சென்று விட்டாள்.

அறிவழகன் வெண்ணெய்க் கட்டியை வீட்டு வாசலில் வைத்தான் ஒரு பலூனில் குங்குமக் கரைசலை ஊற்றி அதை ஒரு மாட்டின் அடி வயிற்றில் மறைவாகக் கட்டினான். ஒரு மூடியுள்ள பாத்திரத்தில் துளை செய்து அதில் முயலை விட்டு மூடினான். பாத்திரத்தை கிழே வைத்து கால்களால் அழுத்திக்கொண்டான்.


நேரம் நகர்ந்தது. சூரன் ஊருக்குள் நுழைந்தான். ஹா..ஹா..ஹா..இந்த ஊரிலும் எல்லோரும் ஓடி விட்டார்கள். நிறைய ஆடு, மாடுகள் இருக்கின்றன. பத்து நாட்களுக்கு விருந்துதான் என்று சொன்னவாறு வந்தான்.

ஏய் சூரா! நில் என்று தைரியமாகக் குரல் கொடுத்தான் அறிவழகன்.

சூரன் வியப்புற்று. யாருடா அவன். என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது?  என்றபடி திரும்பிப் பார்த்தான்.

அறிவழகன் தனது வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தான். காலுக்கடியில் பாத்திரம். பக்கத்திலேயே மாடு கட்டப்பட்டிருந்தது. சற்றுத் தள்ளி வெண்ணெய் கட்டி. பார்பதற்கு அது கல் போல் இருந்தது.

நான் உன்னோடு போட்டியிடப் போகிறேன் என்றான் அறிவழகன்.

அதைக்கேட்டு சூரன் இடிஇடியெனச் சிரித்தான். பொடிப் பயலே! நீ என்னோடு போட்டி போடுகிறாயா? ஒரு ஊது ஊதினால் பறந்து விடுவாய் என்றான்.

யாரைப் பார்த்து அப்படிச் சொன்னாய்? நான் ஊதுகிறேன் பார் என்றவன் குனிந்து பாத்திரத்தை நோக்கி ஊதியபடி காலை எடுத்தான்.
அடுத்த நொடி பாத்திரத்தில் இருந்த முயல் ஒட, அதனுடன் பாத்திரமும் உருண்டோடியது.

சூரன் திகைத்துப் போனான். எனினும் சுதாரித்துக் கொண்டு, நான் நினைத்தால் உன்னை ஒரே கையால் நசுக்கி விடுவேன் என்றான்.

நான் நினைத்தால் மலையையே நசுக்குவேன். சந்தேகம் இருந்தால் பார் என்ற அறிவழகன் கல் போல் கிடந்த வெண்ணைக் கட்டியை எடுத்து அழத்த அது நசுங்கியது.

சூரனுக்குள் பயம் வந்தது. பொடிப்பயலே! உன்னை அடித்து அடித்துக் கொள்கிறேன் பார் என்று உறுமினான்.

உன்னால் இரண்டு கைகளால்தானே அடித்துக் கொல்ல முடியும் நான் ஒரு விரலால் தீண்டினாலே ரத்தம் கொட்டும். பார்க்கிறாயா? என்று சொன்னபடி விரல் நகத்தால் மாட்டின் அடி வயிற்றில் கட்டி இருந்த பலூனைக் குத்தினான். ரகசியமாக மாட்டின் வாலை அழுத்தினான்.

மாடு வலியால் ம்ம்மா... என்றது. அதேசமயம் பலூன் உடைந்து குங்கும நீர், ரத்தம் போல கீழே கொட்டியது.

சூரன் அதிர்ந்து போனான். என்னை விட நீ வலிமையானவன்தான். இனி நான் உனது அடிமை. என்ன செய்ய வேண்டும் சொல்? என்று கேட்டான்.

இனி எந்த ஊருக்குள்ளும் வந்து யாரையும் பயமுறுத்தக்கூடாது காட்டுக்குள் சென்றுவிடு என்றான் அறிவழகன்.

சூரனும் சென்றுவிட, விஷயமறிந்து ஊர் திரும்பிய மக்கள் அறிவழகனைப் பாராட்டினார்கள்.

  

அறிவின் பலம்

சுவாமிநாதன் அந்த கிராமத்தில் பண்டிதர். அவர் சிறந்த அறிவு கொண்டிருந்ததோடு, அன்பும் அடக்கமும் மிகுந்தவராக விளக்கினார்.
ஏழைக் குழந்தைகளுக்காக இலவச பாடசாலை ஒன்றை அமைத்து கல்வி போதித்து வந்தார். மக்கள் பண்டிதரின் மீது நல்ல மரியாதை வைத்திருந்தனர்.

கண்ணப்பன் என்ற செல்வந்தனும், அதே கிராமத்தில் வசித்து வந்தான். முரடனாகிய கண்ணப்பன் மீது கிராம மக்களுக்கு மதிப்போ, மரியாதையோ இல்லை. செல்வந்தனாக இருந்தும் தனக்கு கிடைக்காத மதிப்பும், மரியாதையும் பண்டிதருக்கு கிடைக்கிரதே? என்று கண்ணப்பன் பண்டிதரின் மீது பொறாமை கொண்டான்.

பண்டிதரை எங்கு கண்டாலும், கண்ணப்பன் வம்புக்கு இழுப்பான். அவமானப்படுத்த நினைப்பான்.

ஒருநாள் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த பின் பண்டிதர் சுவாமிநாதன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது கண்ணப்பன் தன் தோட்டத்திலிருந்து பறித்த பூசனிக்காயோடு வந்து கொண்டிருந்தான். கண்ணப்பனுடன் அவனது இரு தோழர்களும் வந்தனர்.

கண்ணப்பனையும், அவனது தோழர்களையும் கண்ட பண்டிதர் ஒதுங்கி நடந்தார்.

ஆனால் அவர்களோ, ‘என்ன, பண்டிதரே பள்ளிக்கூடத்திலிருந்து வருகிறீர்களா?’ என்று வழியை மறித்தபடி கேட்டு வம்பிழுத்தனர்.

“ஆமாம் கண்ணப்பா. நான் சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டும் வழியை விடு” என்றபடி பண்டிதர் விலகி நடக்கத் தொடங்கினார்

‘நீங்கள் பெரிய அறிவாளி  என்று எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். அப்படியானால் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் விட்டுவிடுகிறோம். இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் சரியாகப் பதில் சொல்லிவிட்டால் உங்கள் வழிக்கே நான் வரமாட்டேன்’ என்று வீம்பாகப் பேசினான்.

‘சரி, உன் கேள்வி என்னவென்று கேளு கண்ணப்பா! எனக்கு நேரமாகிறது’ என்றார் பண்டிதர்.

‘என் கையிலுள்ள இந்த பூசணிக்காயின் எடை எவ்வளவு? நீங்கள் சொல்லும் எடை சரியாக இருக்கிறதா? என்று நாங்கள் நிறுத்துப் பார்போம். சரியாக சொல்லாவிட்டால் நீங்கள் முட்டாள் என்று ஒத்துக் கொள்ள வேண்டும் என்று திமிராகப் பேசினான் கண்ணப்பன்.

பண்டிதர் ஒரு கணம் யோசித்தார். ‘கண்ணப்பா இந்த பூசனிக்காய் உன் தலையின் எடைதான் இருக்கிறது. வேண்டுமானால் நிறுத்துப் பார்த்துக்கொள்’ என்று பதில் சொன்னார் பண்டிதர்.

இதை கேட்ட கண்ணப்பனும், அவனது கூட்டாளிகளும் அதிர்ந்து போனார்கள்.

‘அட பண்டிதர் நம்மை மடக்கிவிட்டாரே? பூசணிக்காயின் எடையை சரி பார்க்க நம் தலையை கொய்தால் அல்லவா முடியும். தலையை கொய்ய முடியுமா? பூசணியை எடைபோட முடியுமா?’ என்று திகைத்த கண்ணப்பன், தன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு ஓடியே போனான். அதன்பின் அவன் பண்டிதரிடம் வம்பு செய்வதே இல்லை!

யார் பலசாலி?

‘நான்தான் பலசாலி’ ‘நான்தான் பலசாலி’ என்று சொல்லி சிங்கம் எப்பொழுது பார்த்தாலும் காடு மேடெல்லாம் தற்பெறுமை அடித்துக் கொண்டிருந்தது.

இந்த செயல் மற்ற விலங்குகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அப்படியிருந்தும் சிங்கத்தின் தற்பெருமையை ஒருவரும் அடக்கமுடியாமல் அடங்கி ஒடுங்கி இருந்தனர்.

அந்தக் காட்டில் ஒரு குளம் இருந்தது. அதில் நட்சத்திர ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் குளத்தை ஒட்டி ஒரு நாவல் மரம் இருந்தது. அதில் விச்சித்திரன் என்ற அணில் வாழ்ந்து வந்தது. நட்சத்திர ஆமையும், விசித்திரனும் உயிர்த் தேழர்களாகப் பழகி வந்தனர்.

சிங்கம், அணிலைப் பார்த்து ‘மூடனே நான் கீழே இருக்கிறேன். நீ மரியாதை இல்லாமல் மேலே இருப்பதா? நீ என்னைவிட பெரியவனா?  கீழே வந்து என்னை வணங்கி நில். இல்லை தோலை உரித்து கழுகுக்குப் போட்டு விடுவேன்.’ என்று அதட்டியது.

அணில் பயந்து போய்ச் சிங்கம் சொன்னது போல் நடந்தது.

சிங்கம் சென்றதும் குளத்தை விட்டு வெளியே வந்தது நட்சத்திர ஆமை.

தன் நண்பன் அவமானத்தால் தலை குனிந்து நிற்பதைக் கண்ட ஆமை, ‘வசித்திரா சிங்கம் சொன்னதற்கு ஏன் கவலைப்பட்டுத் தலைகுனிந்து நிற்கறே? உலகில் விலிமை உள்ளவர்கள் விலைமை அற்றவர்களை அடக்கி ஆள்வதுதானே வழக்கம்? யானையிடம் இப்படி அதனால் சொல்ல முடியுமா? என்று ஆறுதல் சொன்னது.

நண்பா சிறியவர்  பெரியவர் என்றாலும் தன்மானம் பொதுதானே? தேவை இல்லாமல் இன்னொருவருக்கு அடங்கி ‘சாலம்’ போடுவது கேவலம் இல்லையா? அவரவர் படைப்புக்கும், வேற்றுமைக்கும் ஏற்றபடி அவரவர் பலசாலிகள்தானே? என்று கொதித்தது.

‘நன்பா உன் ஆதங்கம் புரிகிறது. இதன் கொட்டத்தை அடக்கத்தான் வேண்டும். என் அம்மா இதன் கெடுபிடிக்கு அடங்க மறுத்ததற்காக அதை கொன்றுவிட்டது, எனக்கும் இதைப் பழிக்குப்பழி வாங்க தான் ஆசை. அதை எப்படி செய்யலாம்?’

அப்போது அங்கே ஒரு கட்டெறும்பு வந்தது.

‘நண்பர்களே! நீங்கள் பேசியதைக் கேட்டு நானும் கோபம் கொண்டேன். சிங்கத்தின் கொட்டத்தை நான் அடக்குகிறேன்.
அதோ அந்த ஆலமரத்தடியில் தானே சிங்கம் உறங்கும். நாளை அங்கே வந்துவிடுங்கள். ‘யார் பலசாலி’ என்று நிரூபிக்கிறேன்’ என்று ஆலமரத்தில் சென்று தங்கியது.

வழக்கம்போல சிங்கம்  ஆலமரத்தடியில் இளைப்பாறியது.

ஆமை கல்லுக்கடியில் மறைந்துகொண்டது. அணில் புதருக்குள் ஒளிந்துகொண்டது.
எறும்பு சிங்கத்தின் காதுக்குள் மெதுவாகச் சென்று ஙுழைந்து கொண்டு குடைந்தும் கடித்தும் இம்சைப்படுத்துயது.

சிங்கம் வலி தாங்க முடியாமல், ‘அய்யோ... அய்யோ... வலி உயிர்போகுதே. காப்பாத்துங்க காப்பாத்துங்க’ என்று அலறியது.

‘நீ பெரிய பலசாலிதானே, முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளவும்’
என்று சிறித்தது எறும்பு.

அணிலும், ஆமையும் தைரியமாக வெளியே வந்து சிரித்துக் கூத்தாடியன.

ஒரு கட்டெறும்பிடம் தன்பலம் பலிக்காமல் போகவே, சிங்கம் தன் ஆணவத்தை கைவிட்டது.

ஆமையும், அணிலும், சிங்கத்தை விட்டுவிடும்படி கூறவே, எறும்பு சிங்கத்தின் காதுக்குள் இருந்து வெளியே வந்தது.
அன்றில் இருந்து சிங்கம் தான் மட்டும் பலசாலி என்று சொல்வதை விட்டுவிட்டது.

உண்மையான திருடன்.

மதன நாட்டு அரண்மனையில் இருந்த ராணியின் விலை உயர்ந்த ரத்தின அங்கிகளும், மரகத மாலைகளும் திருடுபோய் விட்டன. வீரர்கள் திருடனை துரத்திச் சென்றார்கள். அவன், அடர்ந்த காட்டின் வழியாக தப்பித்து ஒடிக் கொண்டிருந்தான். அப்போது துறவி ஒருவர் தன் கிழிந்த ஆடைகளையும், திருவோட்டையும் கரையில் வைத்துவிட்டு ஓடையில் நீராடிக்கொண்டிருந்தார்.

இதுதான் சமயம் என்று நினைத்த அந்தத் திருடன், தன் உடைகளைக் கழற்றி அங்கு வைத்துவிட்டு, ஆண்டியின் உடைகளை அணிந்து தப்பி ஓடிவிட்டான். அங்கு வந்து சேர்ந்த வீரர்கள், குளிப்பவன் தான் நகைகளைக் கொள்ளை அடித்த திருடன் என்று நினைத்து, துறவியைப் பிடித்து இழுத்துச் சென்றனர்.

மன்னர் முன் நறுத்தப்பட்டார் துறவி. மிகவும் கோபமுற்ற மன்னர், உடனடியாக துறவியை கழுகுமரத்தில் ஏற்ற உத்தரவிட்டார்.

“மன்னா, நான் கழுகுமரம் ஏறுவதில் வருத்தமில்லை. ஆனால், அதற்கு முன் காணாமல் போன என் உடைமைகளை நீங்கள் கண்டுபிடித்துத் தர வேண்டும். அப்படித் தந்தால் நான் திருடன் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்” என்று துறவி சொன்னதும், மன்னர் வெகுன்டார்.

“என்னது, உன் உடைமைகளை நான் மீட்டுத்தரவேண்டுமா? முதலில் அரண்மனையில் களவாடிய மாணிக்கத்தையும், நவரத்தின அங்கிகளையும் கொடுத்துவிட்டுப் பின்னர் கழுகுமரம் ஏறு” என்று கர்ஜித்தார் மன்னர்.

“மன்னா, நானோ ஒரு துறவி. என்னிடம் இருந்தவை கிழிந்த ஆடைகளும், திருவோடும் தான். ஆனால், அவையும் களவுபோய் விட்டன. நான் இப்போது வெறும் துண்டு மட்டுமே உடுத்தி நிற்கிறேன். அப்படி இருக்க, நான் எப்படி அரண்மனையில் களவுபோன பொருட்களைக் கொடுக்க முடியும். நீங்கள் தான் மன்னர் என்ற முறையில் களவுபோன என் உடைமைகளை மீட்டுத்தர வேண்டியவர்” என்றார் துறவி.

மன்னர் ஏதோ சொல்ல வாயைத்திறக்க, குறுக்கிட்ட அமைச்சர், “மன்னா, இவரைப் பிடித்த நம் வீரர்கள் இவரிடம் இருந்து களவுபோனவற்றை மீட்க முடியவில்லை. எனவே, இவர் உன்மையில் ஒரு துறவியாக இருந்தால் என்ன செய்வது?” என்று இழுக்கவும்... துறவி பேசலானார்.

“அமைச்சரே, நான் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும். அதேசமயம், உண்மைக் குற்றவாளியை கைது செய்ய வேண்டும்” என்றதும்...மன்னர் கோபத்துடன், “கள்வன் கூறுவதை ஒருபோதும் இந்த மன்னன் ஏற்க மாட்டான்” என்றார்..

“அப்படியானால் உங்கள் நம்பிக்கைக்குறிய இரு வீரர்களை என்னுடன் அனுப்புங்கள். நான் இன்னும் இரண்டு நாட்களில் அந்தத் திருடனைக் கன்டுபிடித்து, களவு போன நகைகளையும் மீட்டு வருகிரேன். அவ்வாறு செய்தால், இந்த அரசன் துறவியாக வேண்டும். நான் தோற்றால், உடனே கழுகுமரம் ஏறி உயிர் துறப்பேன்” என்றார். 

மன்னர் துறவியின் இத்தகைய விவாதத்தை கேட்டு மிரண்டுபோனார். உடனே அமைச்சரிடம் ஆலோசனைக் கேட்டு நிலைமையை சமாலிக்க நிபந்தனையை ஒப்புக்கொண்டு இரு வீரர்களைத் துறவியுடன் அனுப்பிவைத்தார்.

“வீரர்களே! அந்தத் திருடன் என் உடைகளைத் திருடிக் கொண்டு ஓடிய இடம், நம் நாட்டின் எல்லைப்பகுதி. எனவே, அவன் பக்கத்து நாட்டின் எல்லை ஆரம்பத்தில்  போலித் துறவியாகத்தான் இன்னமும் நடமாடிக் கொண்டிருப்பான். அங்கு எனக்குத் தெரிந்த துறவிகள் பலர் உண்டு. யார் புதிதாக வந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடித்தால் நாம் திருடனை அடையாலம் காணலாம்” என்றார்.

அதன்படி அண்டைநாட்டின் எல்லையை அடைந்தவுடன் சிறிது நேரத்தில், தன் கிழிந்த உடைகளையும், திருவோட்டையும் வைத்து திருடனைக் கண்டுக்கொண்டார், துறவி. உடனே வீரர்களிடம் சொல்லி அவனைக் கைது செய்தார். அவனிடம் சோதனைச் செய்ததில், களவுபோன அத்தனை நகைகளும் மீட்கப்பட்டன.

மன்னரிடம் அந்தக் கள்வனை இழுத்து வந்தனர் வீரர்கள். தன்னுடைய தவறுக்கு வருந்திய மன்னர், துறவியை அரசனாக நியமித்துவிட்டு, துறவு வாழ்கை வாழ்வதற்க்காக காட்டை நோக்கி நடந்தார்.

எது சொர்க்கம்?

காட்டிலே வாழ்ந்து வந்த குள்ளநரிக்கு காட்டு வாழ்க்கை போரடித்துப் போய்விட்டது. காட்டுக்கு வெளியே உள்ள நாடு நகரங்களைச் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டது.  இது பற்றி யாரை விசாரிக்கலாம் என யோசனை செய்தது? உடன் அதன் நினைவுக்கு வந்தது செங்கால் நாரைதான்.

நாரை காட்டை விட்டு வெளியோறி மாலையில் இரையோடு வருவதைப் பலமுறை பார்த்துள்ளது. எனவே நாரை தங்கியுள்ள மரத்துக்கு ஒடியது.

நாரையண்ணே! நாரையண்ணே! என்று குரல் கொடுத்தது. நாரை மரத்தில் இருந்து கிழே இறங்கி வந்தது. என்ன குள்ளநரியாரே, இவ்வளவு தூரம் என்றது.

நாரையண்ணே! எனக்கு காட்டு வாழ்க்கை வெறுத்து விட்டது. நாடு, நகரங்களைச் சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். நீதான் எனக்கு யோசனை சொல்ல வேண்டும் என்றது.

குள்ளநரியாரே! நான் இரைதேடி நெடுந்தொலைவு போகிறேன் என்றால் அது இறைவன் எனக்கு இட்ட விதி. உனக்குத்தான் காட்டிலேயே எல்லாம் கிடைக்கிறதே. நீ ஏன் காட்டைவிட்டு வெளியேற ஆசைப்படுகிறாய். அது ஆபத்தில்தான் முடியும் என்றது செங்கல் நாரை.

உனக்குச் சொல்ல விருப்பமில்லை என்றால் விட்டுவிடு நாரையாரே என்று சொல்லி கோபத்துடன் திரும்பியது குள்ளநரி.

நான் உன் நல்லதுக்குத்தான் சொன்னேன். கோபித்துக்கொள்ளாதே. நாடு, நகரங்களில் மனிதர்களும் ஆடு, மாடு, குதிரை, நாய், கோழி போன்ற சில விலங்குகளும் வாழ்கின்றன என்றது நாரை.

ரொம்ப நன்றியண்ணே! என்றபடியே சந்தோஷமாக ஓடியது குள்ளநரி. வழியில் தனது நண்பனான கரடியைப் பார்த்தது நரி. 
நடந்ததைக் கூறி கரடியையும் துணைக்கு அழைத்துக்கொண்டு காட்டை விட்டு வெளியேறியது.

நகர எல்லைக்குள் நரியும் கரடியும் வந்தன. அங்கே ஒரு சலவைத் தொழிலாளி ஆற்றில் துணிகளைத் துவைத்து மணலில் காய வைத்துவிட்டு குளித்துக் கொண்டுருந்தான்.

குள்ளநரியும் கரடியும்  அவசரமாக ஓடி ஆளுக்கு ஒரு பேண்ட், சட்டை என எடுத்து அணிந்துகொண்டு மனிதர்களைப் போலவே நடந்து சென்றன.

வழியிலே சிறுவர்கள் கழுதை வாலில் தகர டின்னை கட்டி கழுதையை விரட்டிச் செல்வதைக் கண்டு இரண்டும் வருந்தின. அளவுக்கு அதிகமாக பாரம் இழுக்க முடியாமல் காளை மாடுகள் ரோட்டில் விழுவதைக் கண்டன. கண் எதிரிலேயே ஆடுகளைத் தோல் உரிப்பதைக் கண்டு கண்ணீர் விட்டுக் கதறின.

பொழுதுசாய்ந்து இரவாகியது, மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதைக் கண்டு குள்ளநரியும் கரடியும் அவர்கள் பின்னே சென்றன. ஒரு கூடாரத்தினுள் எல்லோரும் ஙுழைந்தனர். நரியும் கரடியும் அதற்குள் நைசாக, யாருக்கும் தெரியாமல் ஙுழைந்தன. அங்கிருந்த சேரில் உட்கார்ந்தன. அது ஒரு சர்க்கஸ் கூடாரம்.

கோமாளி ஒருவன் உள்ளே வந்து வேடிக்கை காட்டியதைக் கண்டு குள்ளநரியும் கரடியும் சிரித்தன. அடுத்து மூன்று குதிரைகள் வேகமாக ஒடிவந்தன. அவற்றை சாட்டையால் அடித்தப்படியே  பின்னால் ஒருவன் ஒடிவந்தான். குழந்தைகளும் பெரியவர்களும் சிரித்தனர். குள்ளநரியும் கரடியுமோ துடித்தன. ஐயோ இவைகள் நம்மோடு வசித்த மிருகங்கள் ஆயிற்றே என்று கண்ணீர்  சிந்தின.

யானை ஒன்று சோகமாக ஒன்று சோகமாக உள்ளே வந்து கண்ணீர் விட்டு அழுதபடியே ஒரு ஸ்டூலில் ஏறி இரண்டு கால்களையும் மேல் நோக்கித் தூக்கியபடி அமர்ந்தது. சிங்கம் ஒன்று கண்ணீர் சிந்தியபடியே ஒரு ஸ்டுல் மீது நான்கு கால்களையும் நெருக்கியபடி நின்றது.

ஐயோ! காட்டுக்கே ராஜாவான உனக்கா இந்த கதி என்று கரடியும் நரியும் பரிதாபப்பட்டன.

கரடி ஒன்று சைக்கிளை ஓட்டிக்கொண்டு உள்ளே ஙுழைந்தது. மூன்று முறை சர்க்கஸ் கூடாரத்தினுள் வட்டமடித்தது. நான்காவது முறை வட்டமடிக்கும்போது தனது இனத்தைச் சேர்ந்த கரடி ஒன்று மாறுவேடத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டது. சோகம் தாளவில்லை. ‘ஊ’ என்று ஊளையிட்டபடி கதறி அழுதது.

கரடி கதருவதைக் கண்ட நரியும் கரடியும் தாங்கள் மாறுவேடத்தில் இருப்பதையும் மறந்து ‘ஊ’ என ஊளையிட்டு அழுதன. சர்க்கஸ் கூடாரம் களேபரமாகிவிட்டது.

கூடாரத்தினுள் ஏதோ புது மிருகம் வந்துவிட்டது எனப் பயந்து எல்லோரும் ஓட... சிலர் கையில் கிடைத்த தடியுடனும் இரும்புக் கம்பியுடனும் குள்ளநரியையும் கரடியையும் துரத்தினர்.

உயிர் பிழைத்தால் போதும் என்று இரண்டும் காட்டை நோக்கி ஓடின. நமக்கு என்றும் சொர்க்கம் நமது காடுதான் என்று சொல்லிக்கொண்டு காட்டுக்குள் ஓடி மறைந்தன.

சிறு கதைகளுக்கு ஒர் அறிமுகம்

சிறுகதைகள் நம் மனக் கண்ணாடியைத் தூய்மைப் படுத்தும் சிறந்த நூல்கள் ஆகும். சிறுவர் முதல் பெரியவர் வரை, உள்ள அனைவரின் மனதையும், அறிவையும், பலப்படுத்தும் நல்ல கதைகள் ஆகும். இத்தகைய கதைகளை வாசிப்பதனால் சிறுவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்ல கற்பனை வளத்தை உண்டாக்குவதோடு, வாழ்வியலில் உண்டாகும் பிரட்ச்சனைகளை சமாலிக்கும் ஒரு நல்ல மனப்பக்குவம் கிடைத்துவிடுகின்றது. அது மட்டுமின்றி சிறு கதைகள் வாசிப்பது  நல்ல பொழுதுபோக்கும் கூட. எனவே  இத்தகைய பழக்கத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த வலைதளத்தில் ஒழுக்கம், நேர்மை, நன்நடத்தை, கல்வி, மறியாதை, நாகரீகம், பன்பாடு, நம்பிக்கை, தயிரியம், பனிவு, மற்றும் கருணை, அறிவு, நட்பு, பக்தி, தருமம் மேலும் அன்பு, இறையான்மை, மன்னிப்பு, உழைப்பு, உர்ச்சாகம், முயற்சி, ஆகியவற்றை ஊக்குவிக்கும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து வெளியிடப்பட்டுள்ளன. ஆகையால் இத்தகைய கதைகளை எல்லோரும் பயன்படுத்தி பயன்பெறளாம்.

கதைகள்


கதைகள் என்றால் வயதில் பெரியோரும் சிறியோரும் விரும்பிக் கேட்பர். நம் நாட்டில் மக்கள் பண்புகளை வளர்ப்பதற்கும், நீதிகளைக் கூறுவதற்கும், மகிழ்ச்சியூ
ட்டுவதற்கும். பொழுது போக்குவதற்கும் பல கதைகளைக் கூறி வந்துள்ளனர். குழந்தைகளுக்கு முகுந்த உற்சாகம் தரவல்லது கதை கேட்பதாகும். கதை கேட்பதை போலவே, கேட்ட கதையைச் சொல்வதிலும் அவர்களுக்கு ஆர்வம் உண்டு.

கதைகளின் இன்றியமையாமை


கேட்டல் திறன், பேசுதல் திறன், படித்தல் திறன், எழுதுதல் திறன் போன்ற திறன்களை மேம்படுத்த வயது வரம்பின்றி அனைவருக்கும் பயிற்சி அளிக்க இந்த கதைகள் உதவுகின்றன.

கேட்டல் திறன்


கதைகளை கூறும்போது மற்றவர்களுக்கு கேட்டல் திறன் வளரும். கதையின் மையக் கருத்து கேட்டல், கதைகளுக்குத் தலைப்புக் கொடுக்கச் சொல்லுதல், கதை உறுப்பினரின் பண்பு பற்றிக் கேட்டல், கதை நிகழ்ச்சிபற்றிக் கேட்டல் முதலானவற்றின் மூலம் ஆசிரியராக இருந்தால் மாணவர்களின் கேட்டல் திறனை வளர்க்களாம் அல்லது பெற்றோராக குழந்தைகளின் கேட்டல் திறனை வளர்க்களாம்.

பேசுதல் திறன்


கதைகளைக் கூறச் செய்தல் நல்ல வாய்மொழி பயிற்சியாகும். முறையாகப் பேசுதலுக்கு நன்கு உதவும். கதை உறுப்பினரின் பேச்சைக் கூறும்பொழுது குரல் ஏற்றத்தாழ்வுடன் பேசுதலில் பயிற்சி கிடைக்கும். கதையில் வரும் வருணனைகளைக் கூறும்பொழுதும், நிகழ்ச்சிகளைக் கூறும்பொழுதும் அந்த இடத்துக்கேற்ற சொற்றொடர்களைக் கையாளுவதில் பயிற்சி கிடைக்கும்.

படித்தல் திறன்

கதைகளை ஆர்வத்துடன் படிப்பதால் படிப்பதில் ஒருமுகப்படுத்தும் திறன் வளரும், விரைவாகப் படிக்கும் பழக்கம் ஏற்படும்; வாய்க்குட் (சத்தம் வராமல் மௌனமாக) படித்தல் திறன் வளரும். ஆசிரியராக இருந்தால் ‘படித்ததன் பின்னர் வினாக்கள் கேட்கப்படும்’ என்று மாணவர்களுக்கு தெரிவிக்கும்போது. மாணவர்கள் மேலோட்டமாக படிக்கமால் கருத்துக்களை நன்கு அறிந்துகொள்ளும் முறையில் படிக்கும் பழக்கம் உண்டாகும்.

எழுதுதல் திறன்


கதைகளை எழுதச் செய்வதால் திருத்தமான சொற்களைக் கையாளும் திறன் வளரும். நிகழ்ச்சிகளை முறையாக எழுதவும் கருதத்துகளின் ஒழுங்குமுறைக்கேற்ப பத்தி பிரித்து எழுதவும் பயிற்சி கிடைக்கும். கதை உறுப்பினர் பேச்சினை அப்படியே மேற்கோளாக எழுதுங்கால் நிறுத்தற்குறிகளைப் பயனப்டுத்த நேரிடும். வினா, வியப்பு, மேற்கோள், நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்துவதில் நல்ல பயிற்சி கிடைக்கும். இவ்வாறு கதைகள் மூலம் சிறுவர்களுக்கு நான்கு அடிப்படைத் திறன்களும் வளர்க பெரிதும் உதவுகின்றன.

நம்பிக்கை

காலாண்டு விடுமுறை முடிந்து அன்று தான் பள்ளி வேலைநாள் ஆரம்பமானது. காலைப் பிரார்த்தனை முடிந்ததும், புதிதாய் வந்த ஆசிரியர் ஒருவரை அறிமுகப்படுத்தினர் தலைமை ஆசிரியர். அவர்தான் தமிழாசிரியர் அன்பரசன். எதையுமே புதிய கோணத்தில் பார்பவர், அன்பானவர். தலைமையாசிரியவர் அவரை ஆறாம் வகுப்புக்கு வகுப்பாசிரியராக நியமித்தார்.

முதல் பாடவேளை. புது ஆசிரியரைக் கண்டவுடன் மாணவர்கள் சற்று கலவரத்துடன் காணப்பட்டனர்.

“மாணவர்களே! இன்று முதல் நாள் என்பதால் உங்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.

முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த முதல் மாணவனைத் தொடர்ந்து அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் மாணவர்களின் படிப்புநிலை பற்றி கேட்டார்.

வகுப்புத் தலைவன் மணி எழுந்து, “சார், அபி பர்ஸ்ட்ரேங்க், சரண்யா செகண்ட் ரேங்க், செல்வம் தேர்டு ரேங்க்” என்று தொடர்ந்து பத்து ரேங்க் வரை சொல்லி முடித்தான். 

பத்து பேரும் எழுந்து நின்றனர். அவர்களைக் கவனித்து விட்டு அமரச் சொய்த ஆசிரியர், “ஒழுங்காக படிக்காதவர்கள் எத்தனை பேர்?” என்றதும், அனைவரும் கடைசி பொஞ்சை சுட்டிக்காட்டினர்.

“அறிவு மட்டும் சுத்தமாக படிக்கமாட்டான் சார். எப்பவும் நல்லா ஊர் சுத்துவான்” என்று சத்தம்க கூறினான் ஒரு மாணவன்.

அறிவை எழுந்து நிற்கச் சொன்னார் ஆசிரியர். கடைசி பெஞ்ச்சில் இருந்து எழுந்து நின்றான் அறிவு. பார்பதற்கு சற்று உயரமாகத் தெரிந்தான்.

“மாணவர்களே! இனி இந்த வகுப்புக்கு இவன் தான் லீடர். இவன் சொல்படிதான் அனைவரும் கேட்க வேண்டும்” என்று ஆசிரியர் கூறிய அடுத்த நொடி, வகுப்பே சிரிப்பிலையில் மூழ்கியது. அவனைத் தவிர அனைவரும் சிரித்ததால் தலை கவிழ்ந்து நின்றான் அறிவு.

“அமைதி...அமைதி... ஏன் சிரிக்கிறீர்கள்? இந்த வகுப்பை வழி நடத்தும் அத்தனைத் திறமையும் அவனிடம் இருக்கிறது. அவனால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”
என்று ஆசிரியர் கூறவும், மணி அடிக்கவும் சரியாக இருந்தது. அன்றைய பாடவேளை முடிந்து.

புதிதாக வந்த ஆசிரியர் அவ்வாறு கூறியவுடன் அன்று முழுவதும் மிகுந்த குழப்பத்துடன் காணப்பட்டான் அறிவு. வழக்கமாகச் சேரும் மாணவர்களுடன் சேராமல் தனியே இருந்தான்.

மறுநாள் காலை பள்ளி வழக்கம் போல் ஆரம்பித்தது. ஆனால், அறிவு மட்டும் வழக்கத்திற்கு மாறாக காணப்பட்டான். ஆம், தினமும் தாமதமாக வந்து உடற்கல்வி ஆசிரியரிடம் திட்டு வாங்குவான், இன்று 8.30 மணிக்கே வந்து விட்டான்.


இந்தச் செய்தி, ஆசிரியர் அன்பரசனின் காதுக்கு எட்டியது. தன்னுடைய முயற்சியில் முதல் படியைக் கடந்து விட்டதை எண்ணி மகிழ்ந்தார். அன்று முதல் ஒழுக்கமான மாணவனாக திகழ்ந்தான் அறிவு.

நாட்கள் கடந்தன. இரண்டாம் இடைப்பருவத் தேர்வு வந்தது. அறிவு மிகவும் கஷ்டப்பட்டு படித்தான். இதுவரையிலும் படிப்பு பற்றி கவலையே படாதவன், முதல் முறையாக படிக்க எண்ணினான். ஆனால், எல்லாமே அவனுக்கு புதிதாகத் தெரிந்தது. ஒன்றுமே புரியவில்லை. எனவே, ஆசிரியர்களிடம் தனியாகச் சென்று சந்தேகம் கேட்டான். அவனின் இந்த செய்கை மற்ற ஆசிரியர்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. அவர்களும் அவனுக்கு ஒத்துழைத்து, புரியாத பாடங்களை புரிய வைத்தனர்.


இரண்டாம் இடைப்பருவத் தேர்வு முடிவு வந்தது. இதுவரையில் ஒரு பாடத்தில் கூட தேர்ச்சி பெறாத அறிவு, முதல் முறையாக மூன்று பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தான். ஆங்கிலம், கணக்கில் மட்டும் தோல்வியடந்தான். இவனின் வெற்றிக்கு காரணமான வகுப்பாசிரியர் அன்பரசனை அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர். தொடர்ந்து அவன் முன்னேறுவான் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.