விஞ்ஞானத்தின் கதைகள்

விமானம் தோன்றிய கதை –


சகோதரர்கள் இருவர் தெருவில் கிடக்கும் துருப்பிடித்த இரும்புத் துண்டுகளையும், எலும்புத் துண்டுகளையும் பொறுக்கி விற்று வாழ்க்கை நடத்தி வந்தனர். அதன் பிறகு பல தொழில்களில் ஈடுபட்டனர். ஆனால், தோல்வியே மஞ்சியது.

ஒரு நாள் அவர்களில் ஒருவன் லைப்ரரிக்கு சென்றான். அங்கு ஒரு சுவாரசியமான கதை ஒன்றைப் படித்த அவனுக்கு, பொறிதட்டியது. அந்தக் கதையில் ஒரு மனிதன் இறக்கைகள் எதுவும் இல்லாமல் காற்றாடி போன்ற ஒன்றின் துணையால் வானில் பறப்பது போல சித்தரிக்கப்பட்டிருந்தது.

அதைப்படித்த உடனே தானும் அவ்வாறு ஏன் பறக்கக்கூடாது? என்ற எண்ணம் ஏற்பட்டது. அதே சிந்தனையுடன் வந்து தனது சகோதரனிடம் அந்த எண்ணத்தைத் தெரிவித்தான். இருவரும் விண்ணில் பறப்பது பற்றி தீவிரமாகச் சிந்தித்து, பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர்.

கடுமையாக முயற்ச்சிகளுக்குப் பின்னர் வானில் பறக்க ஒரு எந்திரத்தைக் கண்டுபிடித்தனர். அதன் உதவியால் 1903-ம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி வெற்றிகரமாக வானில் பறந்து சாதனை படைத்தனர். தங்களுடைய விடாமுயற்சியால் விந்தை புரிந்த அவர்கள் தான் “ரைட் சகோதரர்கள்.”

விஞ்ஞானத்தால் உன்டாகும் விபரீதம் -


சமையலறையில் உள்ள புகைக்கூண்டையும், ஜன்களையும்  நாம் அடைத்து வைத்தால் சமையலறை அதிக வெப்பமாக மாறிவிடும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், தெரிந்து கொண்டே பூமியின் புகைக்கூண்டையும், ஜன்னலையும் நாம் அடைத்து வருகிறோம்.

சூரியனிடம் இருந்து பூமிக்கு வரும் வெப்பத்தில் ஒருபகுதி விண்வெளிக்குச் செல்கிறது, ஆனால், தற்போது பல்வேறு ஆலைகளாலும், மோட்டார் வாகனங்களாலும் காற்று மண்டலத்தில்  அதிகளவு கார்பன்-டை-ஆக்சைடு  சேர்ந்து வருகிறது.

இந்தக் கார்பன்-டை-ஆக்சைடும்,  இன்னும் சில வாயுக்களும் ஒன்று சேர்ந்து பூமியில் இருந்து வெப்பம் வெளியேறாதபடி தடுப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இந்த வாயுக்கள் காற்று மண்டலத்தின் மேற்புறத்தில் பூமியைச்சுற்றி கண்ணாடித்தகடு போல அமைந்துவிடும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். கண்ணாடியின் வழியே சூரிய வெளிச்சம் பூமிக்கு வரும். ஆனால், பூமியில் இருந்து வெப்பம் வெளியேற முடியாதபடி கண்ணாடி தடுத்துவிடும். இதன் விளைவாகப் பூமியின் சாராசரி வெப்பநிலை உயரும்.

பூமி இப்படி சூடாகிக் கொண்டே வந்தால், வட மற்றும் தென் துருவங்களில்  உள்ள பனிப்பாளங்கள் உருகும். அதனால் கடல் மட்டம் உயரும். இதன் விளைவாக மாலத்தீவு போன்ற கடற்கரைப் பகுதிகள் நீரில் மூழ்கிவிடும். இதுதவிர, இன்னும் பல விபரீதங்களும் உண்டாக வாய்ப்புண்டு. எனவே, முடிந்தளவு வாகனங்களின் பயன்பாட்டைக் குறைப்பதுடன்; தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் புகையைச் சுத்தப்படுத்தி வெளியே அனுப்புதற்கான வழிமுறைகளைச் செய்ய வேண்டயது அவசியமாயிற்று.

ஆக்சிஜன் அளவை அதிகப் படுத்த காடுகளை அதிக அளவு வளர்க்க வேண்டும். இதன் மூலம் கார்பன்-டை-ஆக்சைடு அளவு கட்டுபடுத்தப்பட்டு பூமிக்கு குளிர்ச்சி ஏற்படும். இயற்கை சூழ்நிலை அமைப்பு அதிக மாற்றத்திற்கு உள்ளாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக