ஞாயிறு, 10 மார்ச், 2013

உண்மையான திருடன்.

மதன நாட்டு அரண்மனையில் இருந்த ராணியின் விலை உயர்ந்த ரத்தின அங்கிகளும், மரகத மாலைகளும் திருடுபோய் விட்டன. வீரர்கள் திருடனை துரத்திச் சென்றார்கள். அவன், அடர்ந்த காட்டின் வழியாக தப்பித்து ஒடிக் கொண்டிருந்தான். அப்போது துறவி ஒருவர் தன் கிழிந்த ஆடைகளையும், திருவோட்டையும் கரையில் வைத்துவிட்டு ஓடையில் நீராடிக்கொண்டிருந்தார்.

இதுதான் சமயம் என்று நினைத்த அந்தத் திருடன், தன் உடைகளைக் கழற்றி அங்கு வைத்துவிட்டு, ஆண்டியின் உடைகளை அணிந்து தப்பி ஓடிவிட்டான். அங்கு வந்து சேர்ந்த வீரர்கள், குளிப்பவன் தான் நகைகளைக் கொள்ளை அடித்த திருடன் என்று நினைத்து, துறவியைப் பிடித்து இழுத்துச் சென்றனர்.

மன்னர் முன் நறுத்தப்பட்டார் துறவி. மிகவும் கோபமுற்ற மன்னர், உடனடியாக துறவியை கழுகுமரத்தில் ஏற்ற உத்தரவிட்டார்.

“மன்னா, நான் கழுகுமரம் ஏறுவதில் வருத்தமில்லை. ஆனால், அதற்கு முன் காணாமல் போன என் உடைமைகளை நீங்கள் கண்டுபிடித்துத் தர வேண்டும். அப்படித் தந்தால் நான் திருடன் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்” என்று துறவி சொன்னதும், மன்னர் வெகுன்டார்.

“என்னது, உன் உடைமைகளை நான் மீட்டுத்தரவேண்டுமா? முதலில் அரண்மனையில் களவாடிய மாணிக்கத்தையும், நவரத்தின அங்கிகளையும் கொடுத்துவிட்டுப் பின்னர் கழுகுமரம் ஏறு” என்று கர்ஜித்தார் மன்னர்.

“மன்னா, நானோ ஒரு துறவி. என்னிடம் இருந்தவை கிழிந்த ஆடைகளும், திருவோடும் தான். ஆனால், அவையும் களவுபோய் விட்டன. நான் இப்போது வெறும் துண்டு மட்டுமே உடுத்தி நிற்கிறேன். அப்படி இருக்க, நான் எப்படி அரண்மனையில் களவுபோன பொருட்களைக் கொடுக்க முடியும். நீங்கள் தான் மன்னர் என்ற முறையில் களவுபோன என் உடைமைகளை மீட்டுத்தர வேண்டியவர்” என்றார் துறவி.

மன்னர் ஏதோ சொல்ல வாயைத்திறக்க, குறுக்கிட்ட அமைச்சர், “மன்னா, இவரைப் பிடித்த நம் வீரர்கள் இவரிடம் இருந்து களவுபோனவற்றை மீட்க முடியவில்லை. எனவே, இவர் உன்மையில் ஒரு துறவியாக இருந்தால் என்ன செய்வது?” என்று இழுக்கவும்... துறவி பேசலானார்.

“அமைச்சரே, நான் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும். அதேசமயம், உண்மைக் குற்றவாளியை கைது செய்ய வேண்டும்” என்றதும்...மன்னர் கோபத்துடன், “கள்வன் கூறுவதை ஒருபோதும் இந்த மன்னன் ஏற்க மாட்டான்” என்றார்..

“அப்படியானால் உங்கள் நம்பிக்கைக்குறிய இரு வீரர்களை என்னுடன் அனுப்புங்கள். நான் இன்னும் இரண்டு நாட்களில் அந்தத் திருடனைக் கன்டுபிடித்து, களவு போன நகைகளையும் மீட்டு வருகிரேன். அவ்வாறு செய்தால், இந்த அரசன் துறவியாக வேண்டும். நான் தோற்றால், உடனே கழுகுமரம் ஏறி உயிர் துறப்பேன்” என்றார். 

மன்னர் துறவியின் இத்தகைய விவாதத்தை கேட்டு மிரண்டுபோனார். உடனே அமைச்சரிடம் ஆலோசனைக் கேட்டு நிலைமையை சமாலிக்க நிபந்தனையை ஒப்புக்கொண்டு இரு வீரர்களைத் துறவியுடன் அனுப்பிவைத்தார்.

“வீரர்களே! அந்தத் திருடன் என் உடைகளைத் திருடிக் கொண்டு ஓடிய இடம், நம் நாட்டின் எல்லைப்பகுதி. எனவே, அவன் பக்கத்து நாட்டின் எல்லை ஆரம்பத்தில்  போலித் துறவியாகத்தான் இன்னமும் நடமாடிக் கொண்டிருப்பான். அங்கு எனக்குத் தெரிந்த துறவிகள் பலர் உண்டு. யார் புதிதாக வந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடித்தால் நாம் திருடனை அடையாலம் காணலாம்” என்றார்.

அதன்படி அண்டைநாட்டின் எல்லையை அடைந்தவுடன் சிறிது நேரத்தில், தன் கிழிந்த உடைகளையும், திருவோட்டையும் வைத்து திருடனைக் கண்டுக்கொண்டார், துறவி. உடனே வீரர்களிடம் சொல்லி அவனைக் கைது செய்தார். அவனிடம் சோதனைச் செய்ததில், களவுபோன அத்தனை நகைகளும் மீட்கப்பட்டன.

மன்னரிடம் அந்தக் கள்வனை இழுத்து வந்தனர் வீரர்கள். தன்னுடைய தவறுக்கு வருந்திய மன்னர், துறவியை அரசனாக நியமித்துவிட்டு, துறவு வாழ்கை வாழ்வதற்க்காக காட்டை நோக்கி நடந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக