ஞாயிறு, 10 மார்ச், 2013

சிறு கதைகளுக்கு ஒர் அறிமுகம்

சிறுகதைகள் நம் மனக் கண்ணாடியைத் தூய்மைப் படுத்தும் சிறந்த நூல்கள் ஆகும். சிறுவர் முதல் பெரியவர் வரை, உள்ள அனைவரின் மனதையும், அறிவையும், பலப்படுத்தும் நல்ல கதைகள் ஆகும். இத்தகைய கதைகளை வாசிப்பதனால் சிறுவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்ல கற்பனை வளத்தை உண்டாக்குவதோடு, வாழ்வியலில் உண்டாகும் பிரட்ச்சனைகளை சமாலிக்கும் ஒரு நல்ல மனப்பக்குவம் கிடைத்துவிடுகின்றது. அது மட்டுமின்றி சிறு கதைகள் வாசிப்பது  நல்ல பொழுதுபோக்கும் கூட. எனவே  இத்தகைய பழக்கத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த வலைதளத்தில் ஒழுக்கம், நேர்மை, நன்நடத்தை, கல்வி, மறியாதை, நாகரீகம், பன்பாடு, நம்பிக்கை, தயிரியம், பனிவு, மற்றும் கருணை, அறிவு, நட்பு, பக்தி, தருமம் மேலும் அன்பு, இறையான்மை, மன்னிப்பு, உழைப்பு, உர்ச்சாகம், முயற்சி, ஆகியவற்றை ஊக்குவிக்கும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து வெளியிடப்பட்டுள்ளன. ஆகையால் இத்தகைய கதைகளை எல்லோரும் பயன்படுத்தி பயன்பெறளாம்.

கதைகள்


கதைகள் என்றால் வயதில் பெரியோரும் சிறியோரும் விரும்பிக் கேட்பர். நம் நாட்டில் மக்கள் பண்புகளை வளர்ப்பதற்கும், நீதிகளைக் கூறுவதற்கும், மகிழ்ச்சியூ
ட்டுவதற்கும். பொழுது போக்குவதற்கும் பல கதைகளைக் கூறி வந்துள்ளனர். குழந்தைகளுக்கு முகுந்த உற்சாகம் தரவல்லது கதை கேட்பதாகும். கதை கேட்பதை போலவே, கேட்ட கதையைச் சொல்வதிலும் அவர்களுக்கு ஆர்வம் உண்டு.

கதைகளின் இன்றியமையாமை


கேட்டல் திறன், பேசுதல் திறன், படித்தல் திறன், எழுதுதல் திறன் போன்ற திறன்களை மேம்படுத்த வயது வரம்பின்றி அனைவருக்கும் பயிற்சி அளிக்க இந்த கதைகள் உதவுகின்றன.

கேட்டல் திறன்


கதைகளை கூறும்போது மற்றவர்களுக்கு கேட்டல் திறன் வளரும். கதையின் மையக் கருத்து கேட்டல், கதைகளுக்குத் தலைப்புக் கொடுக்கச் சொல்லுதல், கதை உறுப்பினரின் பண்பு பற்றிக் கேட்டல், கதை நிகழ்ச்சிபற்றிக் கேட்டல் முதலானவற்றின் மூலம் ஆசிரியராக இருந்தால் மாணவர்களின் கேட்டல் திறனை வளர்க்களாம் அல்லது பெற்றோராக குழந்தைகளின் கேட்டல் திறனை வளர்க்களாம்.

பேசுதல் திறன்


கதைகளைக் கூறச் செய்தல் நல்ல வாய்மொழி பயிற்சியாகும். முறையாகப் பேசுதலுக்கு நன்கு உதவும். கதை உறுப்பினரின் பேச்சைக் கூறும்பொழுது குரல் ஏற்றத்தாழ்வுடன் பேசுதலில் பயிற்சி கிடைக்கும். கதையில் வரும் வருணனைகளைக் கூறும்பொழுதும், நிகழ்ச்சிகளைக் கூறும்பொழுதும் அந்த இடத்துக்கேற்ற சொற்றொடர்களைக் கையாளுவதில் பயிற்சி கிடைக்கும்.

படித்தல் திறன்

கதைகளை ஆர்வத்துடன் படிப்பதால் படிப்பதில் ஒருமுகப்படுத்தும் திறன் வளரும், விரைவாகப் படிக்கும் பழக்கம் ஏற்படும்; வாய்க்குட் (சத்தம் வராமல் மௌனமாக) படித்தல் திறன் வளரும். ஆசிரியராக இருந்தால் ‘படித்ததன் பின்னர் வினாக்கள் கேட்கப்படும்’ என்று மாணவர்களுக்கு தெரிவிக்கும்போது. மாணவர்கள் மேலோட்டமாக படிக்கமால் கருத்துக்களை நன்கு அறிந்துகொள்ளும் முறையில் படிக்கும் பழக்கம் உண்டாகும்.

எழுதுதல் திறன்


கதைகளை எழுதச் செய்வதால் திருத்தமான சொற்களைக் கையாளும் திறன் வளரும். நிகழ்ச்சிகளை முறையாக எழுதவும் கருதத்துகளின் ஒழுங்குமுறைக்கேற்ப பத்தி பிரித்து எழுதவும் பயிற்சி கிடைக்கும். கதை உறுப்பினர் பேச்சினை அப்படியே மேற்கோளாக எழுதுங்கால் நிறுத்தற்குறிகளைப் பயனப்டுத்த நேரிடும். வினா, வியப்பு, மேற்கோள், நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்துவதில் நல்ல பயிற்சி கிடைக்கும். இவ்வாறு கதைகள் மூலம் சிறுவர்களுக்கு நான்கு அடிப்படைத் திறன்களும் வளர்க பெரிதும் உதவுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக